இன்றைய திருக்குறள் 01.03.2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
குறள் விளக்கம் :-
1.மு.வ : ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
2. சாலமன் பாப்பையா : எதனாலும், அழிந்து போகாமல் ஒழுக்கத்தை விரும்பிக் காத்துக்கொள்க; அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால் ஒழுக்கமே துணையாகும்.
முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS