இன்றைய திருக்குறள் 02.03.2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
குறள் விளக்கம் :-
1.மு.வ : ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
2. சாலமன் பாப்பையா : தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் இல்லாது போனால் இழிந்த குடும்பத்தில் பிறந்தது ஆகிவிடும்.
முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS