இன்றைய திருக்குறள் 04.03.2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
குறள் விளக்கம் :-
1.மு.வ : பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
2. சாலமன் பாப்பையா : பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
காலத்தை வெல்வோம், அவலத்தை கொல்வோம்!!.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
தமிழ் நேசன்,சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS