இன்றைய திருக்குறள் 07.03.2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
குறள் எண் : 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
குறள் விளக்கம் :-
1.மு.வ : நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
2. சாலமன் பாப்பையா : நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
அ.வ.ந தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS