இன்றைய திருக்குறள் 20.03.2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: பிறன் இல் விழையாமை
குறள் எண் : 149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
குறள் விளக்கம் :-
1.மு.வ : கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.
2. சாலமன் பாப்பையா : அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.
வறுமை நிலைக்கு பயந்து விடாதே..
திறமை இருக்கு மறந்து விடாதே...!
முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS