இன்றைய திருக்குறள் 16.03.2016
குறள் பால்: அறத்துப்பால்
குறள் அதிகாரம்: பிறன் இல் விழையாமை
குறள் எண் : 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
குறள் விளக்கம் :-
1.மு.வ : இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
2. சாலமன் பாப்பையா : அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்?.
முடியும் என்று நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. முதலில் நீ உன்னை நம்பு வெற்றி நிச்சயம்.
குறள் நியதி தர்மம் பற்றி பார் போற்ற வாழ்க வளமுடன், நலமுடன்...,வாழ்க பல்லாண்டு .. வாழ்க வையகம்!!,
தமிழ் நேசன், சன்
கிருஷ்ணன் மனோகரன்
COMMENTS