வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகள் இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும்
முழுமையாக படிக்கவும்
1). இலவசங்கள் கிடையாது
2). தமிழ்நாட்டின் கடன் முழுமையாக அடைக்கப்படும்
3). எந்த ஒரு அரசு திட்டத்திலும் முதலமைச்சரின் புகைப்படம் இடம் பெறாது
4)எந்த ஒரு அரசு திட்டதிற்கும் முதலமைச்சரின் பெயரோ அல்லது புனைபெயரோ இடம் பெறாது.
( அம்மா உணவகம் அல்லது கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று பெயர் வைக்காமல் தமிழக அரசு திட்டம் என்று பெயர் வைக்கப்படும்)
5). அரசு உயர் அதிகாரிகள்
மாவட்ட ஆட்சியர்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்றோர் 2 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பணிஇடமாற்றம் செய்யபடுவர்.
( சகாயம் IAS போன்ற நேர்மையான அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்து தொல்லை செய்ய மாட்டோம்)
6) இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்
7)தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்
8).மது ஒழிப்பு அல்லது மதுக்கடை நேரம் குறைப்பு செய்யப்படும்.
9). கட்சதீவு மீட்கப்படும்
அல்லது மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
10). அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும்
11). பொது இடங்களில் காலில் விழும் பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும்
12). தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி என்று மட்டுமே
சொல்லப்படும்
(மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க என்று
அரசு அதிகாரிகள் சொல்ல நிர்பந்திக்க மாட்டோம்)
12) எதற்கெடுத்தாலும் சட்டசபையை வெளிநடப்பு செய்ய மாட்டோம்
13). மாதம் ஒரு முறை கண்டிப்பாக தொகுதிக்கு சென்று மக்களை சந்திப்போம்
14) அனைத்து சட்டசபை கூட்டதொடர்களிலும் கலந்து கொள்வோம்
15). தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியை வைக்க சொல்லி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவோம்.
16). அரசு அதிகாரிகளுக்கு வயது வரம்பு உள்ளதை போல அரசியல்வதிகளுக்கும் வயது வரம்பு கொண்டு வர
சட்டம் இயற்றுவோம்
( நாட்டின் நலன் கருதி
chair ய் விட்டு எந்திரிக்க முடியாதவர்களை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்)
17). தனியார் விளம்பரங்களில் நடிக்க மாட்டோம்
18). மாதத்திற்கு ஒரு முறையாவது செய்தியாளர்களை கண்டிப்பாக சந்திப்போம்.
19) செய்தியாளர்களை காறி
துப்பமாட்டோம்
20) வாரிசு அரசியலை குறைப்போம்.
21). ஒரு வேட்பாளருக்கு ஒரு மனைவி மட்டுமே இருக்குமாறு பார்த்துகொள்வோம்.
22) எதிலும் sticker ஒட்ட மாட்டோம்.
23)மேலே கூறியுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். (இல்லையென்றால் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டோம்)
சிந்தியுங்கள் வாக்களர்களே
நான் ஒரு சுத்த தமிழ் இளைஞன்
ஏன் 1GB free nu சொன்னா தான் பகிருவீங்களா
COMMENTS