தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 18 May 2016

முல்லா ஏன் அழுதார்

முல்லா ஏன் அழுதார்
 ஒரு நாள் முல்லா தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அதைப் பார்த்த அவருடைய நண்பர் முல்லாவிடம் ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.

 அதற்கு முல்லா சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பாவும் இருபது லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனது அத்தை சென்ற வாரம் எனக்கு 30 லட்சம் ரூபாய் சொத்தை எனக்கு எழுதி வைத்துவிட்டு அவரும் இறந்துவிட்டார். எனது தாத்தா மூன்று நாட்களுக்கு முன் 50 லட்சம் ரூபாயை இறக்கும் முன் எனக்கு எழுதி வைத்துவிட்டார் என்று கூறிவிட்டு, மேலும் முல்லா அழுகையை நிறுத்தாமல் அழுதுக்கொண்டே இருந்தார்.

 அதற்கு நண்பர் உனக்கு கிடைத்த இவ்வளவு ரூபாய்களை வைத்து சந்தோஷப்படாமல் ஏனப்பா அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு முல்லா, நண்பரிடம் இனிமேல் சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து போவதற்கு எனக்கு பணக்கார சொந்தக்காரர்கள் யாரும் இல்லை என்பதை நினைத்து அழுதுகிட்டு இருக்கேன் என்றார். முல்லா சொன்னதைக் கேட்ட நண்பர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

நீதி :
பிறர் நமக்கு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்.

No comments:

Post a Comment