மகளெனும் தேவதை
என் மகள்
டீச்சராக மாறியபோது
மாணவர்களாக
வேடமிட்டன பொம்மைகள்!
டாக்டராக மாறியபோது
நோயாளிகளாகி
வைத்தியம் பார்த்தன!
அம்மாவாக மாறியபோது
குழந்தைகளாகி
சொன்ன பேச்சு கேட்டன!
விளையாடிய களைப்பில்
தூங்கி விட்டாள் மகள்!
சுற்றிலும்
விழித்தபடி பொம்மைகள்...
அடுத்து என்னவாக
ஆவதெனத் தெரியாமல்!
- Gauthaman DS Karisalkulaththaan.
No comments:
Post a Comment