#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 13 August 2016

உன்னுடைய பலவீனம்தான் உனது பலம்- நீதி கதை

கார்பரேட் நீதிக் கதை

நீங்கள் புதியாதை தொழில் தொடங்கும் போது பலர் இளக்காரமாக பார்ப்பார்கள்.

உங்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் உங்கள் மீது அவதூறுகளைப் பரப்புவார்கள்.

உங்கள் திறன் அறியாது குறைத்து மதிப்பிட்டு நண்பர்களிடம் பகிர்வார்கள்.

புதியாதாய் தொழிலில் இறங்குபவர்களுக்கு நம்பிக்கை என்ற ஒற்றை கை மிக முக்கியம் என்பதை அவர்கள் உணர்திருப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியாது.

பணம் மட்டும் இருந்தால் வென்று விடலாம் என்பது பலருடைய எண்ணம்.

நம்பிக்கை என்னும் மூலதனத்துக்கு முன் பணம் என்பது சாதாரணம்.

கீழே உள்ள உண்மை நிகழ்வினைப் படியுங்கள்.

உங்கள் எண்ணங்களைத் தள்ளிப் போடாதீர்கள்.

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான்.

ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.

ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது.

கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான் ?

பல மாஸ்டர்களிடம் போனான்.
எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது.

குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து
போனான்

“குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு. குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ?

பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான்.

சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி.

சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி.

ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது.

எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி.

அதிலும் அவனுக்கே வெற்றி.

அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான்.

அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.
கடைசிப் போட்டி.

எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன்.
ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும்.

பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது.

முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான்.

பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி.

'போட்டியை நிறுத்திவிடலாமா?' என்கின்றனர்

போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான்.

எதிராளி வீழ்ந்தான்.

பையன் சாம்பியனானான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள்.

போட்டியாளர்களுக்கு ஆச்சரியம்.

அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை.

அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்

“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே “ என்றான்

புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு,உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே !
உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !”

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான்.

தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

No comments:

Post a Comment