'பாகுபலி' 7-ம் தேதி ரிலீஸ்😱⁉
ஏப்ரல் 28-ம் தேதி 'பாகுபலி தி கன்க்ளூஷன்' வெளியாகவுள்ள நிலையில், 'பாகுபலி' முதல் பாகத்தை மறுவெளியீடு செய்ய படக்குழு முடிவுசெய்துள்ளது.
'பாகுபலி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'பாகுபலி 2'க்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து 'பாகுபலி' படத்தின் இந்தி உரிமையை வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் 🎬கரண் ஜோஹர் கூறுகையில், "ஒரு பெரும் இதிகாசத்தை மீண்டும் நினைவுகூர வேண்டிய தருணம் இது. இதுவரை அந்தப் பிரம்மாண்டத்தை பார்த்திராதவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர். பாகுபலி 7-ம் தேதி வெளியாகிறது."
மேலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மறுவெளியீடு இருக்கும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
COMMENTS