தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 14 May 2017

பிளஸ் 2 தேர்வு ✍எழுதிய முதல் திருநங்கை

பிளஸ் 2 தேர்வு ✍எழுதிய முதல் திருநங்கை👍

தூத்துக்குடி மாவட்டம், ஓலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி 👩பச்சைக்கிளி. இவர் அங்குள்ள சவலப்பேரி பகுதியில் இயங்கி வரும் 🏫மேல்நிலைப் பள்ளியில் 2014-ஆம் ஆண்டு பதினொராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்👍. பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு திருநங்கையாக மாறி, தனது பெயரை 👩தாரிகாபானு என மாற்றிக்கொண்டார்😳. இதனை அடுத்து, பல போராட்டங்களுக்கு பிறகு, அம்பத்தூர் அரசு 👩பெண்கள் மேல்நிலை 🏫பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் சேர தாரிகாபானுவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கினார்👌. இதைதொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த தாரிக்கா பானு கடந்த மார்ச் மாதம்,2017ம் ஆண்டு நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ✍எழுதினார். 
இந்நிலையில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், 550 மதிப்பெண்கள் எடுத்து திருநங்கை தாரிகா பானு தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளார்🙂. இவர் அறிவியல் பாடப்பிரிவை எடுத்து படித்துள்ளார்😯. இந்தியாவில் பள்ளி மாணவியாக இருக்கும் ஒரே திருநங்கையும் இவர்தான்👏. எதிர்காலத்தில் மருத்துவராவதே தனது லட்சியம் எனவும், கண்டிப்பாக கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க உள்ளதாகவும் பானு தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment