சுத்தமான ரயில் நிலையம்-ரயில்வே துறை அறிக்கை வெளியீடு
இந்தியாவில் உள்ள அனைத்து 🚉ரயில் நிலையங்களிலும் எது சுத்தமான ரயில் நிலையம் என்று பட்டியல் ஒன்றினை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது😯. இந்த பட்டியலில் மொத்தம் 407 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது😳. அதில், முதல் மூன்று இடங்களை 1⃣பீஸ்-அம்ரித்சர், 2⃣விசாகப்பட்டினம், 3⃣கம்மம் முதலியன இந்தியளவில் இடம்பிடித்துள்ளது. மேலும்,
🔰10வது இடத்தில் பெங்களூர்
🔰16வது இடத்தில் ஹைதெராபாத்
🔰27வது இடத்தில் மும்பை சென்ட்ரல்
🔰39வது இடத்தில் தலைநகர் டில்லி
மேலும், இந்தியாவில் உள்ள முதல் 100 இடங்களை பிடித்த ரயில்நிலையங்கள் பட்டியலில் தமிழ்நாடு வெறும் நான்கு இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.
1⃣கும்பகோணம், இந்தியளவில் 40வது இடம்
2⃣கோவில்பட்டி - 46
3⃣மேட்டுப்பாளையம் - 72
4⃣ சேலம் - 76
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் 184வது இடத்தையும், எழும்பூர் 288வது இடத்தையும் இந்தியளவில் பிடித்து மிகுந்த பின்னடைவில் உள்ளது என்பது வருத்தத்திற்குரிய😟 விஷயம் ஆகும். இதனை தொடர்ந்து, 75 பரபரப்பான 🚉ரயில் நிலையங்கள் பட்டியலில் விஜயவாடா 1⃣இடத்திலும், லக்னோ 2⃣வது இடத்திலும் உள்ளன👍. மேலும், டெல்லியின் அனந்த்விகார் ரயில் நிலையம் 5⃣வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS