ஐ.டி.ரெய்டில் சென்னைக்கு 2 வது இடம்
கடந்த, 2016 முதல், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, 💸வருமான வரித்துறை பல்வேறு நகரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது😱. அதில், 14 நகரங்களின் விவரங்கள் மட்டும் தற்போது கிடைத்துள்ளன😯. அதில், முதல் இடத்தில் பெங்களூரு உள்ளது😳. இரண்டாவது இடத்தில் சென்னை இடம் பிடித்துள்ளது😟. இதனை அடுத்து, தென் மாநில நகரங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய கணக்கில் வராத 💸பணம் இருப்பதை ஒப்பு கொண்டவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களே என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்🔈. அதன் படி,
🔰பெங்களூரு
2016ம் ஆண்டில் - 25 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 64.86 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. கணக்கில் வராத, 1,854.45 கோடி ரூபாய் குறித்த ஆவணங்கள் சிக்கின.
2017ம் ஆண்டில் - 72 சோதனைகள் நடத்தப்பட்டன. 131.82 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.கணக்கில் வராத, 4,590.92 கோடி ரூபாய் குறித்த ஆவணங்கள் சிக்கின.
🔰சென்னை
2016ம் ஆண்டில் - 17 சோதனைகள் நடத்தப்பட்டன. 93.84 கோடி ரூபாய் சிக்கியது. கணக்கில் வராத, 1,330.65 கோடி ரூபாய் குறித்த ஆவணங்கள் சிக்கின.
2017ம் ஆண்டில் - 99 சோதனைகள் நடத்தப்பட்டன. 429.74 கோடி ரூபாய் சிக்கியது. கணக்கில் வராத, 3,327.66 கோடி ரூபாய் குறித்த ஆவணங்கள் சிக்கின.
COMMENTS