2018ம் ஆண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்பு ✍பொது தேர்வு 📆அட்டவணை வெளியீடு👍
மாணவர்கள் எந்த வித மன அழுத்தமும் இல்லாமல் ✍தேர்விற்கு முன் கூட்டியே தயாராக வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழக அரசு 10,11 மற்றும் 12ம் வகுப்பான தேர்வு அட்டவணையை பாடவாரியாக வெளியிட்டுள்ளது👍. அதன் படி,
💥10ம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு 2018ம் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வுக்கான காலநேரம் 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் முடிவுகள் 2018 மே 23ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அட்டவணை வருமாறு.,
🔰மார்ச் 16 - தமிழ் முதல்தாள்
🔰மார்ச் 21 - தமிழ் 2ம்தாள்
🔰மார்ச் 28 - ஆங்கிலம் முதல்தாள்
🔰ஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
🔰ஏப்ரல் 10 - கணிதம்
🔰ஏப்ரல் 12 - விருப்பமொழிப் பாடம்
🔰ஏப்ரல் 17 - அறிவியல்
🔰ஏப்ரல் 20 - சமூக அறிவியல்
💥இதனை அடுத்து, 11ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அட்டவணை வருமாறு,
🔰மார்ச் 7 - தமிழ் முதல்தாள்
🔰மார்ச் 8 - தமிழ் 2ம் தாள்
🔰மார்ச் 13 - ஆங்கிலம் முதல்தாள்
🔰மார்ச் 14 - ஆங்கிலம் 2ம் தாள்
🔰மார்ச் 20 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்
🔰மார்ச் 23 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
🔰மார்ச் 27 - இயற்பியல் மற்றும் பொருளியல்
🔰ஏப்ரல் 3 - வேதியியல், கணக்கு பதிவியல்
🔰ஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
🔰ஏப்ரல் 13 - இந்திய கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்
🔰ஏப்ரல் 16 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு
💥இதேபோல், 12ம் வகுப்பு பொது தேர்வு, மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அட்டவணை வருமாறு,
🔰மார்ச் 1 - தமிழ் முதல்தாள்
🔰மார்ச் 2 - தமிழ் 2ம் தாள்
🔰மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்
🔰மார்ச் 6 - ஆங்கிலம் 2ம் தாள்
🔰மார்ச் 9 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
🔰மார்ச் 12 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்
🔰மார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு
🔰மார்ச் 19 - இயற்பியல் மற்றும் பொருளியல்
🔰மார்ச் 26 - வேதியியல், கணக்கு பதிவியல்
🔰ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
🔰ஏப்ரல் 6 - இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்
COMMENTS