--> பொன்னியின் செல்வன் உருவான வரலாறு...! | Whatsapp Useful Messages

பொன்னியின் செல்வன் உருவான வரலாறு...!

பொன்னியின் செல்வன் உருவான வரலாறு...!

👉 அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புகழ்பெற்ற தமிழ் புதினமாகும். 1950-1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராகவும், தனி நு}லாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. இக்காவியம் பண்டைய தமிழரின் பண்பாடும், அமரர் கல்கி அவர்களின் கற்பனை வளமும் ஒருங்கே இணைந்த அமுத கலவை போன்ற படைப்பு என்பதை நம்மால் உணர முடிகிறது.

👉 தமிழரின் போர்குணங்களையும், இறையாண்மையையும் அறிந்துகொள்ள நினைக்கும் இன்றைய இளைஞர்களையும் முந்தைய காலத்திற்கே கொண்டுசெல்லும் வண்ணம் காப்பியங்களை படைத்த பேராசிரியர் அமரர் கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், போன்ற படைப்புகள் படிக்க படிக்க திகட்டாதவை. கல்கி அவர்கள் எழுதிய சரித்திரக் காப்பியங்களில் சரித்திரத்திற்கு எவ்வளவு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. கற்பனையின் பங்கு அதில் எவ்வளவு இருக்கிறது என்று பிரித்தறிய முடியாது என்பது அவரின் தனித்தன்மைக்கு சான்று.

👉 பல நு}ற்றாண்டு காலத்துக்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களின் துணைக் கொண்டு அவற்றின் அடிப்படை ஆதாரங்களிலிருந்து விலகிப் போகாமல் மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் ஒரு மாபெரும் சரித்திரக் காப்பியமாகப் பொன்னியின் செல்வனைப் படைத்திருக்கும் கல்கி அவர்கள் தமிழ் வாசகர்களுக்கும், தமிழுக்கும் கிடைத்த வரம் என்று சொன்னால் அது மிகையாகாது.

👉 இந்த மாபெரும் சரித்திரக் காப்பியத்தில் உலாவரும் கதாபாத்திரங்களான சுந்தர சோழர், ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை, செம்பியன் மாதேவி, வந்தியத்தேவன், அம்பில் அநிருத்தர், வானதி, நந்தினி, மணிமேகலை, பு ங்குழலி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், கந்தமாறன், ஆழ்வார்க்கடியான், குடந்தை சோதிடர், ரவிதாஸன்... இன்னும் இது போன்ற நு}ற்றுக்கணக்கான கதாபாத்திரங்களை நம்மால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

👉 காலத்தைக் கடந்து நிற்கும் படைப்புகளாக மிகச் சிலருடையவையே இருக்கின்றன. கல்கியின் எழுத்துகளை அந்த வரிசையில் முதல் இடத்தில் வைத்துப் போற்றலாம். எத்தனையோ நு}ற்றாண்டுகளுக்கு முன் நடந்தவைகளைச் சுற்றித் தன் கற்பனைச் சிறகுகளைப் பறக்க விட்டு, அந்தக் கற்பனையை அப்படியே தன் எழுத்தில் வடித்திருக்கும் கல்கி அவர்களின் இந்தக் காப்பியம் இன்னும் எத்தனை நு}ற்றாண்டுகள் கடந்தாலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை இதைப் படிக்கும் வாசகர்கள் உணர்வார்கள். படித்தவர்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதை இது. எத்தனை முறை படித்தாலும் புதிதாக அப்பொழுது தான் படிப்பதைப் போன்ற உணர்வைத் தரும்.

👉 ஒரு சில வட்டத்திற்குள் கல்கியின் படைப்புகள் அடைந்து கிடக்கக் கூடாது. அது எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும், பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செயல்பட்ட அவருடைய குடும்பத்திற்கு இந்தச் சமயத்தில் நன்றி கூறுவது தமிழ் வாசகர்கள் அனைவரின் கடமையாகும்.

வரலாற்று காப்பியமான கல்கியின் பொன்னியின் செல்வன் இனி நமது வலைப்பூ இன்று முதல் உங்களைத் தேடி...!



COMMENTS

BLOGGER: 1

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6211,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2339,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: பொன்னியின் செல்வன் உருவான வரலாறு...!
பொன்னியின் செல்வன் உருவான வரலாறு...!
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2017/06/blog-post_21.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2017/06/blog-post_21.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content