*திருப்பதியின் தெப்பக்குளம் மூட படுகிறது😳*
திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பு பணிகளுக்காக இன்று முதல் மூடப்படுகிறது😯. திருப்பதி கோயில் தெப்பக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பக்தர்கள் குளிக்கத் தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது👍. இதனால் பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது😐. ஆண்டுதோறும் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவது வழக்கம்❗. அதன்படி இன்று முதல் தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீரை வெளியேற்றி, மராமத்து பணி செய்து, புதிய தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற உள்ளது🤗. இதனால் தெப்பகுளத்திற்கு வெளியே பக்தர்கள் குளிக்க தற்காலிக குளியலறை அமைக்கப்பட்டுள்ளது👍.
COMMENTS