ஒரே டிக்கெட்-ரயில், பஸ், மெட்ரோ ரயில் பயணம்
சென்னையில் மாநகர 🚌பஸ்கள், 🚃மின்சார ரயில்கள், 🚆மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது😯. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது👌 என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்👏. சென்னை 🚇மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில் 🚌போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று நடந்தது😮. கருத்தரங்கில் 🚇மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டு பேசினார்👍.
அப்போது அவர், சென்னை நகரில் 'ஷேர் ஆட்டோ'வில் பயணம் செய்வதற்கும், 🚇மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கும் ஒரே 💸கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது🙁. ஆனால் 🚇மெட்ரோ ரயிலில் ஏ.சி.வசதி உள்ளது🙂. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடிகிறது👍. அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும்😯. வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்துவிடும்👍 என்றும் தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது😯.
COMMENTS