தமிழக அரசின் பட்ஜெட் அப்டேட்ஸ்
நடப்பாண்டான 2018-19ம் ஆண்டு தமிழக 💸பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான 💺ஓ பன்னீர் செல்வம் இன்று 🏛தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அண்மையில் அவர் அறிவித்த🔈 பட்ஜெட்💸 விவரங்கள் இதோ👇
🔰 மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.10,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு.
🔰 ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
🔰 காவல்துறைக்கு ரூ.7,877 கோடி நிதி ஒதுக்கப்படும். காவல்துறை பயன்பாட்டிற்காக 15 காவல்நிலைய கட்டடங்களும், 543 குடியிருப்புகளும் கட்டித்தரப்படும்.
🔰 மானியம், உதவித் தொகைக்கு ரூ.75,723 கோடி ஒதுக்கீடு.
🔰 ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் அதிர்வெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
🔰 ரூ.24 கோடி ரூபாய் செலவில் பொன்னேரி, நசரத்பேட்டையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்.
🔰 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.4000 மதிப்பில் அம்மா தாய் - சேய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
🔰 இலங்கை அகதிகல் நலத்திட்டங்களுக்காக ரூ. 109.74 கோடி ஒதுக்கீடு
🔰 உதய் திட்டத்துக்கான கடனை சரிகட்ட மின்சார வாரியத்துக்கு தமிழக அரசால் ரூ.4,563 கோடி மானியம் வழங்கப்படும்.
🔰 மீன்வளத்துறைக்கு ரூ.1,016.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
🔰 இஸ்லாமிய பெண்களுக்கு அரசு சார்பில் மகளிர் விடுதி
🔰 விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தமிழக அரசு சாா்பில் உழவன் செயலி அறிமுகம் செய்யப்படும்
🔰 ஓய்வூதியம் மற்றும் மற்ற ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.23,362 கோடி
🔰 பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.333.36 கோடி, உயர்கல்வித்துறைக்கு ரூ.4620 கோடி
🔰 திருமண உதவித்தொகைக்கு ரூ.724 கோடி. நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 லிருந்து ரூ.2000 ஆக உயர்வு
COMMENTS