வாழைத்தண்டு
சூப்
தேவையான
பொருட்கள்:
- நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்
- வெங்காயம் - 3
- தக்காளி - 1 (சிறியது)
- காய்ந்த மிளகாய் - 1
- கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- மிளகு - அரை டீஸ்பூன்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- தனியா - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
:
- தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.
- வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
- இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து 6 கப் நீர் விட்டு அடுப்பை குறைத்து கொதிக்க விடவும்.
- பாதி வெந்ததும் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
COMMENTS