பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4; டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயருமா ⁉
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 24-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்,டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றம்⬆ ஏற்பட்டு வருகிறது. சில தினங்களாக சில பைசாக்கள் மட்டுமே உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மொத்தமாக 4 ரூபாய் உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே இருப்பதாலும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே இருப்பதாலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

COMMENTS