தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 12 June 2018

பார்போற்றும் #பிரான்மலை சிவாலயம்!

பார்போற்றும் #பிரான்மலை சிவாலயம்!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில்

இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த கோவில். இம்மலைக் கோவிலில் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் சிவபெருமான் காட்சி தருகிறார்.பாதாளத்தில் உள்ள கோவிலில் கொடுங்குன்ற நாதர் குயிலமுதநாயகி அருள் பாலிக்கிறார்கள். பூலோகம் என சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதரும் காட்சி தருகிறார்.
மேல்நிலை கோவிலாக கைலாயம் எனப்படும் இங்கு தேனம்மை என்ற அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார்.
கைலாயம் எனப்படும்மேலடுக்கில் உள்ள சன்னதி குடவரைக் கோவிலாக அமைந்துள்ளது.
தேனம்மை என்ற இறைவியின் பேருக்கிணங்க தேனடைகள் நிறைந்திருக்கின்றன. இங்கு பாதாளத்தில் அமைந்துள்ள கொடுங்குன்றநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் மங்கைபாகர் மூர்த்தம் நவமூலி கைச் சாற்றால்செய்யப்பட்டதாகும்  எனவே இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. பெளர்ணமியன்று காலையில் நவபாஷாண சிலைக்கு புணுகு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர்.தேன்,திணை
மாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர். மற்ற சிவன் கோவில்களில் போல் சன்னதியின் எதிரில் நந்தி இக்கோவிலில் கிடையாது. சிவன் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த போது நந்தி தேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார் என்பதால் இங்கு நந்தி நிறுவப்படவில்லை. மேலும் இவ்வாலயத்தில் கொடிமரமும், பலிபீடமும் கிடையாது. மற்ற கோவில்களில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யும் பொழுது சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் மூலிகை மருந்துகள் வைப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவது இல்லை.
இவர் முதலும் முடிவும் இல்லாத வராக இருப்பதால் அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை. இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத் தை மறுமுறை அணிவிப்பது இல்லை. சிவன் கையில் நான்கு வேதங்களை வைத்தபடி காட்சி தருவதால்' வேதசிவன்' என்ற பெயரும் உண்டு.  தலவிருட்சமாக பல நூறாண்டுகண்ட உறங்காபுளி என அழைக்கப்படும் புளியமரம் உள்ளது. இம்மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இத்திருக்கோயில் தீர்த்தம் சிறப்பு மிக்கதாகும். இத்தீர்த்தத்தம் குஷ்டவிலக்கி சுனை என்று அழைக்கப்படுகிறது. நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச்சுனையில் குளித்து சிவனை வழிபட்டால் தோல்வியாதி நீங்கும் என்பது ஐதீகம்.மலையின்
நடுப்பகுதியில் 'வடுகபைரவர் 'சன்னதி உண்டு.வடுகன் என்றால் 'பிரம்மச்சாரி 'என்றும் 'வீரன் 'என்றும் பொருள்படும்.
நின்ற கோலத்தில்  உக்ரமான திருக்கோலத்தில் பைரவர் உள்ளார்.பண்டையகால அரசர்கள் இவரைவணங்கியகாரணத்தா
லும் வீரத்தின் அடையாளமாகவும் இவர் கையில் வாள் உள்ளது.இங்குவந்த திருஞான சம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலை சிவனாகவேகாட்சி தந்தது.எனவே இத்தலத்தில் தன்கால்படக்கூடாது எனக்கூறி ஐந்து மைல் தூரத்தில் நின்றே 'எம்பிரான்மலை' எனச் சொல்லி பதிகம் பாடினார்.எனவே 'எம்பிரான்மலை'எனப்பெயர் பெற்று பின்னர் 'பிரான்மலை'என மறுவியது.முக்காலமும் செய்த பாவங்கள் நீங்க, மூன்று அடுக்குள்ள பிரான்மலை மங்கை பாகர் சிவன்கோவில் சென்று தரிசிப்போமா நண்பர்களே

No comments:

Post a Comment