NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

வரலாற்றில் இன்று 06/07/2018

வரலாற்றில் இன்று

06/07/2018

சூலை 6 (July 6) கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1044 – புனித ரோமப் பேரரசன்மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான்.

1189 – முதலாம் ரிச்சார்டுஇங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1348 – கறுப்புச் சாவுக்குக்காரணமான யூதர்களைப்பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார்.

1411 – தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில்மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனையொங்கில் பேரரசரிடம் ஒப்படைத்தார்.

1483 – மூன்றாம் ரிச்சார்சுஇங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1484 – போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின்வாயிலைக் கண்டான்.

1535 – சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின்எட்டாம் ஹென்றி மன்னரினால் தூக்கிலிடப்பட்டார்.

1557 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னர் பிரான்சுடன் போர் புரிவதற்காக டோவர் துறையில் இருந்து புறப்பட்டார். மேரி தனது கணவரை பின்னர் பார்க்கவில்லை.

1630 – முப்பதாண்டுப் போர்: நான்காயிரம் சுவீடன் படைகள் குசுதாவசு அடால்பசு தலைமையில் செருமனியின் பொமிரானியா நகரை அடைந்தன.

1854 – ஐக்கிய அமெரிக்காவின்குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.

1885 – பிரெஞ்சு வேதியியலாளர்லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர்என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.

1892 – தாதாபாய் நௌரோஜிபிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1917 – முதலாம் உலகப் போர்: அரபுக் கிளர்ச்சியின் போது அராபியப்படைகள் லாரன்சு தலைமையில் அக்காபாவை உதுமானியரிடம்இருந்து கைப்பற்றினர்.

1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

1939 – நாட்சி ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

1941 – செருமானிய இராணுவம் சிமோலியென்சுக்கின் அருகில் சோவியத் இராணுவத்தினரை சிற்றி வளைத்தன.

1944 – அமெரிக்காவில் ஹார்ட்பர்ட்நகரில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் உயிரிழந்தனர், 700 பேர் வரை காயமடைந்தனர்..

1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது.

1956 – சிங்களம் இலங்கையின்அதிகாரபூர்வ மொழியானது.

1962 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.

1964 – மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1966 – மலாவி குடியரசாகியது. ஹேஸ்டிங்ஸ் கமுசு பண்டா அதன் முதல் அரசுத்தலைவரானார்.

1967 – நைசீரிய உள்நாட்டுப் போர்ஆரம்பமானது.

1975 – கொமொரோசு பிரான்சிடம்இருந்து விடுதலையை அறிவித்தது.

1988 – வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 167 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1989 – டெல் அவீவ்–எருசலேம்பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலத்தீன இசுலாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்று ஒன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும்திபெத்தையும் இணைக்கும் நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

2013 – நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – போயிங் 777 விமானம் சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர், 181 பேர் காயமடைந்தனர்.

2013 – கனடாவின் கியூபெக்கில்எண்ணெய்த் தொடருந்து ஒன்று தடம் புரண்டு வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர், நகரின் மத்திய பகுதியில் 30 கட்டடங்கள் சேதமடைந்தன.

*👩‍👩‍👧‍👧பிறப்புகள்*

1781 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர் (இ. 1826)

1832 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ பேரரசர் (இ. 1867)

1870 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)

1901 – சியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1953)

1907 – ஃபிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர், கல்வியியலாளர் (இ. 1954)

1921 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (இ. 2016)

1930 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர் (இ. 2016)

1932 – பூ. கணேசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

1935 – டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)

1935 – ஆர். சண்முகம் மலேசிய எழுத்தாளர்

1937 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது சனாதிபதி (இ. 2014)

1940 – நுர்சுல்தான் நசர்பாயெவ், கசக்ஸ்தானின் 1வது சனாதிபதி

1946 – ஜார்ஜ் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 43வது அரசுத்தலைவர்

1946 – சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர

1975 – 50 சென்ட், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்

1979 – கெவின் ஹார்ட், அமெரிக்க நடிகர்

1980 – இவா கிரீன், பிரெஞ்சு நடிகை

1981 – நிகிதா துக்ரல், இந்திய நடிகை

1985 – ரன்வீர் சிங், இந்திய நடிகர்

*🖤இறப்புகள்*

1476 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1436)

1535 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)

1614 – மான் சிங், ராஜ்புத் அரசர் (பி. 1550)

1827 – தோமஸ் முன்ரோ, சென்னை மாகான ஆளுநர் (பி. 1761)

1854 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1789)

1893 – மாப்பசான், பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1850)

1902 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (பி. 1890)

1971 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர் (பி. 1901)

1985 – மௌனி, தமிழக எழுத்தாளர் (பி. 1907)

1986 – ஜெகசீவன்ராம், இந்திய அரசியல்வாதி (பி. 1908)

2002 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)

2005 – கிளாட் சிமோன், நோபல் பரிசுபெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)

2011 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)

*👌சிறப்பு நாள்*

விடுதலை நாள் (கொமொரோசு, 1975)

விடுதலை நாள் (மலாவி, 1964)

ஆசிரியர் நாள் (பெரு)

No comments:

Post a Comment