https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 11 July 2018

வரலாற்றில் இன்று 11.07.2018

வரலாற்றில் இன்று

பதிவு நாள்:11.07.2018, புதன்
   
ஜூலை 11 கிரிகோரியன் ஆண்டின் 192 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 193 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.

*🔵நிகழ்வுகள்்*

🖋1346 – லக்சம்பேர்க்கின் நான்காம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசன் ஆனான்.

🖋1576 – மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்.

🖋1735 – புளூட்டோ சூரியனுக்குக் கிட்டவாக ஒன்பதாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்துக்கு இந்நாளில் வந்தாக கணித கணக்கீடுகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.

🖋1740 – யூதர்கள் சிறிய ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

🖋1750 – நோவா ஸ்கோசியாவின் ஹாலிஃபாக்ஸ் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

🖋1776 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தான்.

🖋1796 – மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா “ஜே உடன்படிக்கை”யின் படி பெற்றுக் கொண்டனர்.

🖋1811 – வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.

🖋1859 – இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்ல்ஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்.

🖋1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வாஷிங்டன் டிசியைத் தாக்க முயற்சித்தனர்.

🖋1882 – பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

🖋1893 – முதன் முறையாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.

🖋1895 – லூமியேர சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படம் ஒன்றைக் காண்பித்தனர்.

🖋1897 – வட முனைக்கு வாயுக்குண்டு மூலம் செல்லுவதற்காக சாலமன் அண்டிரே நோர்வேயின் ஸ்பிட்ஸ்பேர்ஜன் தீவிலிருந்து புறப்பட்டார். ஆனாலும் வாயுக்குண்டு தரையில் மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.

🖋1921 – மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.

🖋1936 – நியூயோர்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.

🖋1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

🖋1973 – பிறேசில் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் கொல்லப்பட்டனர்.

🖋1978 – ஸ்பெயினில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.

🖋1979 – ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்குத் திரும்பியது.

🖋1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3 – 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.

🖋1987 – உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.

🖋1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.

🖋1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் கொல்லப்பட்டனர்.

🖋1995 – வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.

🖋1995 – சேர்பிய இராணுவம் பொஸ்னிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

🖋2006 – மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.

🖋2007 – பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

🖋2007 – குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.

*🔵பிறப்புகள்*

🖋1767 – ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1848)

🖋1920 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)

🖋1925 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (இ. 2015)

🖋1966 – பாலா, தமிழ் திரைப்பட இயக்குனர்

*🔵இறப்புகள்*

🖋1962 – பல்லடம் சஞ்சீவ ராவ் கருநாடக இசை புல்லாங்குழல் கலைஞர் (பி.1882)

🖋1974 – பியார் லாஜர்க்விஸ்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891)

*🔵சிறப்பு தினம்*

🖋உலக மக்கள் தொகை தினம்.

தொகுப்பு

நாடும் நடப்பும்

No comments:

Post a Comment