NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

வரலாற்றில் இன்று :17/07/2018


வரலாற்றில் இன்று :17/07/2018

சூலை 17 (July 17) கிரிகோரியன் ஆண்டின் 198 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 199 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 167 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1048 –
இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத்தேர்த்ந்டுக்கப்பட்டார்.

1203 – 
நான்காம் சிலுவைப்படையினர் கான்ஸ்டண்டினோபில்நகரைத் தாக்கிக் கைப்பற்றினர்பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார்.

1429 – 
நூறாண்டுப் போர்ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1453 – 
நூறாண்டுப் போரின் இறுதிச் சமர் இடம்பெற்றது. பிரெஞ்சுப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். சுரூசுபரியின் முதலாம் கோமகன் சமரில் கொல்லப்பட்டார்.

1755 – 
கிழக்கிந்தியக் கம்பனிக்குச்சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்கிலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.

1762 – 
உருசியப் பேரரசர் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவரது மனைவி இரண்டாம் கேத்தரீன் முடிசூடினார்.

1771 – 
இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணம் செய்த கனடாவின் சிப்பேவியப் பழங்குடிகளின் தலைவன் இனுவிட்டுமக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.

1791 – 
பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1794 –
பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சி முடிவடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் 16 கார்மேலியப்புனிதர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.

1902 –
வில்லிசு கேரியர் முதலாவது குளிரூட்டியை நியூயோர்க்கில்உருவாக்கினார்.

1911 – 
யாழ்ப்பாணத்தில்தேசவழமைச் சட்டத்தின் திருமணவிதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.

1917 –
பிரித்தானிய அரச குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் மட்டுமே வின்சர்ரென்ற பெயரைப் பெறுவார்கள் என்ற ஆணையை ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பிறப்பித்தார்.

1918 – 
போல்செவிக்குகளின்உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர்இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் எக்கத்தரீன்பூர்க்நகரில் கொல்லப்பட்டனர்.

1918 – 
டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய கர்பாத்தியா என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் செருமானிய யூ-55 மூழ்கடிக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1932 – 
நாட்சிக் குழுக்களுக்கும்எசுஎசுஎஸ்ஏ, மற்றும் செருமானியக் கம்யூனிசக் கட்சி உறுப்பினரக்ளுக்கும் இடையே கலவரம் மூண்டது.

1936 – 
எசுப்பானிய உள்நாட்டுப் போர்எசுப்பானியாவில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 – 
இரண்டாம் உலகப் போர்கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் உயிரிழந்தனர்.

1945 –
இரண்டாம் உலகப் போர்நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில்ஹாரி எஸ். ட்ரூமன்ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின்எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.

1953 –
அமெரிக்காவில் புளோரிடாமாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 44 பேர் உயிரிழந்தனர்.

1955 – 
வால்ட் டிஸ்னிகலிபோர்னியாவில்டிஸ்னிலாண்ட்டைத் திறந்து வைத்தார்.

1967 – 
நாசாவின் சேர்வயர் 4ஆளில்லா விண்கலம் சந்திரனில்"சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.

1968 – 
ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அரசுத்தலைவர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது அசன் அல்-பாக்கர் தலைவரானார்.

1973 – 
ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண்சிகிச்சைக்காக இத்தாலிசென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 – 
அமெரிக்காவின் அப்பல்லோவிண்கலமும் சோவியத்தின் சோயுசுவிண்கலமும் விண்வெளியில்ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 – 
கனடாவின் மொண்ட்ரியால்நகரில் கோடை ஒலிம்பிக்விளையாட்டுகள் ஆரம்பமாயினஇனவொதுக்கல் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 – 
கிழக்குத் திமோர்இந்தோனேசியாவுடன்இணைக்கப்பட்டு, அதன் 27வது மாகாணமானது.

1979 – 
நிக்கராகுவா அரசுத்தலைவர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1981 –
அமெரிக்காவில் கேன்சசுநகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் உயிரிழந்தனர்.

1984 –
ஐக்கிய அமெரிக்காவில் மது அருந்துவோருக்கான குறைந்த பட்ச வயது 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது.

1994 – 
பிரேசில் இத்தாலியை வென்று உலக உதைபந்துஉலகக்கி
ண்ணத்தைப் பெற்றது.

1996 – 
நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.

1998 – 
பப்புவா நியூ கினியில் 7.0 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 2,700 பேர் உயிரிழந்தனர்.

1998 – 
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம்நகரில் எட்டப்பட்டது.

2001 – 
சூலை 2000 விபத்தின் பின்னர் கான்கோர்டு மீண்டும் சேவையில் விடப்பட்டது.

2006 – 
இந்தோனேசியாஜாவாவில்7.7 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 668 பேர் உயிரிழந்தனர்.

2006 – 
இந்தியா சத்தீஸ்கர்மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – 
பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் உயிரிழந்தனர்.

2014 – 
ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1881 – 
அலெக்சாண்டர் சவீனொவ், உருசிய சோவியத் ஓவியர் (. 1942)

1894 – 
ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய மதகுரு, வானியலாளர் (. 1966)

1898 – 
பெரினிசு ஆபாட், அமெரிக்கப் படப்பிடிப்பாளர் (. 1991)

1941 – 
பாரதிராஜா, தமிழகத் திரைப்பட இயக்குனர்

1954 – 
அங்கெலா மேர்க்கெல், செருமனியின் 8வது அரசுத்தலைவர

1969 – 
கேரி கிரே, அமெரிக்க நடிகர்

1979 – 
மைக் வோகெல், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1588 – 
சினான், உதுமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1489)

1762 – 
உருசியாவின் மூன்றாம் பீட்டர்(பி. 1728)

1790 – 
ஆடம் சிமித், இசுக்கொட்டிய மெய்யியலாளர், பொருளியலாளர் (பி. 1723)

1918 – 
உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு (பி. 1868), மற்றும் அவரது குடும்பம்:

அலெக்சாந்திரா பியோதரொவ்னா, அரசி (பி. 1872)

ஒல்கா, இளவரசி (பி. 1895)

தத்தியானா, இளவரசி (பி. 1897)

மரீயா, இளவரசி (பி. 1899)

அனஸ்தாசியா, இளவரசர் (பி. 1901)

அலெக்சி, இளவரசர் (பி. 1904)

1919 – 
டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (பி. 1868)

1972 – 
ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை, யாழ்ப்பாண ரோமன்-கத்தோலிக்க ஆயர் (பி. 1901)

1997 – 
இரா. கிருஷ்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1909)

2001 – 
கேத்தரின் கிரகாம், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)

2012 – 
மிருணாள் கோரே, இந்திய அரசியல்வாதி (பி. 1928)

2014 – 
சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)

2015 – 
இழூல்சு பியான்கி, பிரெஞ்சு வாகன ஓட்ட வீரர் (பி. 1989)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (சிலோவாக்கியா)

சர்வதேச நீதிக்கான உலக நாள் (ஐநா)


No comments:

Post a Comment