#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

சட்டம் அறிந்துகொள்வோம்-17/07/2018

சட்டம் அறிந்துகொள்வோம்!

⛓ விசாரனையின் போது காவல் நிலையத்தில் வைத்து பொதுமக்களை அடிக்கலாமா?

▪ அப்படி அடித்தால் அவர்களின் மீது நாம் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும்??

காவல் துறையினர் மட்டுமல்ல வேற எந்த ஒரு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களை அடிக்கும் உரிமை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. குற்றம் செய்தவரை தண்டிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

 அவ்வாறு அடித்தால் கீழ்காணும் இந்திய தண்டனை சட்டப் பிரிவின் கீழ் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியும்.

IPC – 166 : ஒருவருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்துடன் சட்டத்தின் செயல்பாடுகளை மீருதல்.

IPC – 330 : ஒப்புதலை பெறுவதற்கு தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.

IPC – 357 : சட்ட விரோதமாக அடைத்து வைக்க முயலும் போது தாக்குதல்.

IPC – 321 : தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.

IPC – 322 : தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.

IPC – 324 : ஆயுதங்கள் மூலம் காயம் விளைவித்தல்.

IPC – 307 : கொலை முயற்சி.

மேலும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களை அடித்தால் அது மனித உரிமை மீறல் செயலாக கருதி அவர்களின் மீது வழக்கு தொடர்ந்தால் அவர்களின் பதவி பறிபோகும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment