வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக ஜூலை 24ம் தேதி டெல்லி நோக்கி வணிகர்கள் பேரணி : விக்கிரமராஜா
வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக ஜூலை 24ம் தேதி டெல்லி நோக்கி சுமார் 2 ஆயிரம் வணிகர்கள் பேரணி செல்ல உள்ளதாக கோவையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். வால்மார்ட் நிறுவனத்தை அனுமதிக்க ஆய்வு நடத்தியதை கண்டித்து பேரணி நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேக்கரி உணவுப்பொருட்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
COMMENTS