தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 14 July 2018

பொன்னமராவதியில் பிரபல ரவுடி குண்டாசில் கைது..

பொன்னமராவதியில் பிரபல ரவுடி குண்டாசில் கைது..

பொன்னமராவதி,ஜுலை-14
   கொலை கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்ட  பட்டுக்கோட்டையைச்சேர்ந்த பிரபல ரவுடியை குண்டர் குண்டாசில்  கைதுசெய்யப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை ஆணைவிழுந்தான் குளக்கரையைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் மருது என்ற மருதுபாண்டியன்(26) இவனை பொன்னமராவதி பூக்குடி வீதியைச்சேர்ந்த சின்னத்திரை நடிகர் கண்ணன் என்பவரது தாயார் சின்னம்மாள்  வீட்டின் முன்பு நாய்க்கு சோறு வைத்துக்கொண்டிருந்த போது அவரின் கழுத்தில் கிடந்த செயிணை அறுத்துக்கொண்டு ஓடிய வழக்கில்  பொன்னமராவதி போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது அழகிய  நாச்சியம்மன் கோயில் அருகில் திருக்களம்பூர் தினேஷ் என்வரிடம் வழிப்பறி செய்தது, பட்டுக்கோட்டையில் ஒரு கொலை வழக்கு மேலும் பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்க முயன்ற போது போலீசார் சுற்றி வலைத்து கைது செய்தது, நீடாமங்களத்தில் திருட்டு வழக்கு என கொலை, கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி என 5வழக்கில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடி மருதுபாண்டியை பொன்னமரவாதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்தார். இதனையடுத்து பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன்; புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் அவனை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய உத்திரவிட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளையன் மருதுபாண்டியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment