உலக கோப்பை கால்பந்து: பைனலில் குரோஷியா;இங்கிலாந்து ஏமாற்றம்
🔸🔹மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு குரோஷிய அணி முன்னேறியது. அரையிறுதியில் 2-1 என இங்கிலாந்தை தோற்கடித்தது.
🔸🔹ரஷ்யாவில், 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மாஸ்கோ நகரில் நடந்த அரையிறுதியில் குரோஷியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் இங்கிலாந்தின் டிரிப்பியர் முதல் கோல் அடித்தார். இதற்கு 68வது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிச் ஒரு கோலடித்து பதிலடி தந்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.
🔸🔹பின் இரு அணியினருக்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 109வது நிமிடத்தில் குரோஷியாவின் மாண்ட்ஜூகிச் ஒரு கோலடித்தார். இதற்கு இங்கிலாந்து அணியினரால் கடைசி வரை பதிலடி தர முடியவில்லை. முடிவில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது. ஞாயிறன்று நடைபெறும் பைனலில் குரோஷியா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
🔸🔹இதற்கு முன், கடந்த 1998ல் அரையிறுதிக்கு முன்னேறிய குரோஷியா, பிரான்சிடம் தோல்வியடைந்தது. பின், 3வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
COMMENTS