தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

கந்தர்வக்கோட்டையில் தொடர் திருட்டு மக்கள் பீதியில்

கந்தர்வக்கோட்டையில் தொடர் திருட்டு மக்கள் பீதியில்

*கந்தர்வக்கோட்டை பகுதிகளில் கடந்த மாத காலமாகவே வாரம் ஒரு முறை திருட்டு நடைபெருகிறது கடந்த வாரம் கந்தர்வக்கோட்டை ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் 6 பவுன் தாலியும், இதைப்போல கந்தர்வக்கோட்டை அருகே மங்களா கோவில் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவரது வீட்டிலும் நகை கொள்ளை போனதும் குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் 17.07.2018 இன்று கந்தர்வக்கோட்டை அருகே விராலிப்பட்டி கிராமத்தில் திமுக முன்னாள் கவுன்சிலர் தவசி மகளும் கனகராஜ் மனைவியுமான வஞ்சிக்கொடி என்பவரது தாலியை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர், கனகராஜ் வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் பக்கத்து வீடான பழனிவேல் மகன் சக்திவேல் என்பவரது வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளனர், அவரது வீட்டில் பீரோவை உடைத்து நகை இல்லை என்பதை அறிந்த கொள்ளையர்கள் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் உடைத்து சென்றுள்ளனர்,பின்பு கல்லுப்பட்டியிலும் கைவரிசை காட்டியுள்ளனர், செல்லம்மாள் என்பவரது வீட்டில் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர், கொள்ளையடித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்*

No comments:

Post a Comment