தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 15 July 2018

மரங்களை அழித்தால் மனிதன் உயிர் வாழ தேவையான "ஆக்சிஜன்' அழியும்!

மரங்களை அழித்தால் மனிதன் உயிர் வாழ தேவையான "ஆக்சிஜன்' அழியும்!

"மரங்களை அழிப்பதன் மூலம்,சுற்றுச்சூழல் பாதித்து மனிதன் உயிர் வாழ தேவையான,"ஆக்சிஜன்' எதிர்காலத்தில் கிடைக்காமல் போய்விடும்,' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகளவில் வெப்பம் மனிதரை நேரடியாக தாக்குவதன் மூலம், தோல் நோய், கேன்சர், சிறுநீரக பாதிப்பு ஏற்படும். சூழல் மண்டலத்தில், மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஏக்கருக்கு 70 மரங்கள் இருப்பது நல்லது. ஆனால், இன்றைக்கு, 20 மரங்கள் இருப்பது கூட அரிதாகிவிட்டன. புன்செய் நிலங்கள், ரளில் அதிகளவில் மரங்கள் இருக்க வேண்டும். இன்றைக்கு, காற்றில் 80 சதவீத வெப்ப காற்றாக வீசுகிறது. பொதுவாக, 40 சதவீத வெப்ப காற்று இருந்தால் மட்டுமே, மனிதன் வாழ ஏற்ற சூழலாக இருக்கும். மரங்கள் குறைந்தால் மனிதன் வாழ தேவையான "ஆக்சிஜனுக்கு' திண்டாடவேண்டிய நிலை வரும். இன்றைக்கு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், "கார்பன் மோனாக்சைடு' தாக்கம் தீவிரமடைந்து விட்டது. நிலங்களில் மக்கும் தன்மையற்ற, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், காடுகளில் வசிக்கும் விலங்குகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கழிவுநீர், ஆறு, கடல்களில் கலப்பதின் மூலம், மீன்கள் உட்பட நீர்வாழ் உயிரினங்கள் இறக்கின்றன. விவசாயத்தில், ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், நிலங்களின் தன்மை பாதிு விட்டன. இது தவிர, பூச்சி, நோய் மருந்து பயன்படுத்துவதின் மூலம், மனிதருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு ஏற்படுகிறது.

  அதிகளவு வெப்ப தாக்குதலை சமாளிக்க, மரம் நடவேண்டும். இதை உணர்ந்து தான் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவினர், அதிகளவில் மரங்களை நட்டு வருகின்றனர். ஒரு மனிதன் தனது வாழ்நாளில், 5 மரங்கள் வளர்க்க வேண்டும். காற்றில் "கார்பன் மோனாக்சைடு' அதிகரிப்பதை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாகனங்களில் அதிக புகை ஏற்படாத வகையில், அரசும், தனி மனிதரும் கவனிக்க வேண்டும். காடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள், பிளாஸ்டிக் கழிவை கொட்டுவதால், அதை சாப்பிடும் விலங்குகள் உயிர் இழக்கின்றன. ரசாயன உரங்கள் பயன்பாடை தவிர்த்து, முற்றிலும் இயற்கை உரங்கள் பயன்படுத்த வேண்டும். சாலையோரங்களில், அதிகளவில் மரங்களை வைத்து பராமரித்தால் மட்டுமே, குளுமையான பயணத்தை நம்மால் உணர முடியும். இவற்றை, கர்நாடகா அரசு முழுமையாக பின்பற்றுகிறது. அரசும், மக்களும் மரம் வளர்ப்பதை தங்கள் வாழ்வின் கடமையாக கொண்டால் மட்டுமே,எதிர்கால சந்ததிகள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும், என்றார்.
வி.சுந்தரராமன், தமிழ்நாடு அறிவியல் இயக்க இணைச் செயலாளர்: சுற்றுச் சூழல் மனிதன் மற்றும் உயிர் சார்ந்த சூழலுக்கு அவசியமான ஒன்று. விவசாயத்தில் இயற்கையை தவிர்த்து, செயற்கை முறையை பயன்படுத்தி, அதிக விளைச்சலை உடனடியாக பெற முயற்சிப்பதால், இன்று மண்ணும், பயிரும் பாதிக்கப்படுவதுடன், நம் உடலும் பாதிக்கப்படுகிறது. விவசாயத்தில் உள்ள வேதிப்பொருட்களால், உயிர் சூழல், உயிரற்ற சூழலாகி விட்டது. கழுகுகளையும், கருடன்களையும் இன்று காண முடிவதில்லை. அறிவியல் வளர்ச்சியின் அத்தியாவசியமாகி விட்ட, மொபைல் போனால், இழப்பது நம் காதுகளை மட்டுமல்ல, சிட்டுக்குருவி என்ற இனத்தையும் தான். பலவகை செயற்கை வாசனை பொருட்களை சுவாசித்து, நம் சுவாச வாசத்தை அறவே மறந்து விட்டோம். நெடுஞ்சாலைகளை அமைத்தோம், மரச்சோலைகளை மறந்தோம். காடுகளை அழித்ததால், காட்டு விலங்குகள் ஊருக்குள் வரத் துவங்கி விட்டது. வெப்ப உயர்வு உடம்பில் உள்ள வியர்வை சுரப்பிகளை அதிகமாக்கி, உடல் சமநிலையை கெடுத்துள்ளது. இயற்கையான வாழ்வை நாம் இழந்து விட்டோம். மரணத்தில் மட்டும் தான், இயற்கை எய்தினார், என்ற நிலை. வாழ்வது எல்லாம் செயற்கை நிலை. செயற்கையாக வாழ்ந்து, இயற்கை எய்துவது வாடிக்கை ஆகிவிட்டது. புகையினால் வளி மண்டலம், வலி மண்டலமாகி விட்டது.
இன்றைய முதன்மை வேலை சுற்றுச் சூழலை காப்பது. இளைய சமுதாயம் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். மரங்களை வளர்த்து, நம்மால் முடிந்த அளவு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல், செயல்படுவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய விழிப்புணர்வு நாளைய விதை.

No comments:

Post a Comment