தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 22 July 2018

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது.... ஒருவர் பலி

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது.... ஒருவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்தவர்களை பிணைக் கைதியாகப்பிடித்து வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் அதிவேகமாக வந்து கடையின் முகப்பை உடைத்து நொறுக்கிய அவன், தன்னை துரத்திய பாதுகாவலர்களையும் போலீசாரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். இதனால் கடையில் ஷாப்பிங் செய்தவர்கள் அலறியடித்து ஓடினர்.சிலர் ஜன்னல் வழியாக குதித்து தப்பியோடினர். பிணைக்கைதியாக சிலரைப் பிடித்து வைத்த அவன் ஒரு பெண்ணை சுட்டதில் அவர் காயம் அடைந்தார்.

காயம் அடைந்தவரை போலீசார் கடைக்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மர்மநபர் சரமாரியாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக அந்த மர்ம நபர் குடும்பத் தகராறில் தனது பாட்டியையும் காதலியையும் சுட்டுவிட்டு காரில் வேகமாக வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment