#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 20 July 2018

ரேஷன் கார்டு கிடைக்க தாமதமானால், என்ன செய்வது ? (சட்டம் அறிந்துகொள்வோம்)

சட்டம் அறிந்துகொள்வோம்

◼ ரேஷன் கார்டு கிடைக்க தாமதமானால், என்ன செய்வது ?

◼  தகவல் சட்டத்தை பயன்படுத்தி எப்படி கேட்கலாம்?

=========================================

🔲 நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெரும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.

ஆர்.டி.ஐ. சட்டத்தில் தகவலை கேட்டு வாங்க எதுவாக ஒவ்வொரு துறையிலும் பொது தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 அவர்கள் யார் என்ற விவரம் அந்தந்த அலுவகங்களில் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

அந்தந்த துரையின் இணைய தளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

 பொது தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால், நாம் தகவலை கேட்கும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால், தலைமை தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை காகிதம் போதும். எழுதுவதை தெளிவாக எழுதினால் போதும்.

ஒரு மனுவில் எத்தனை தகவல்களை கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்து கொள்வது நல்லது.

மாநில அரசின் கீழ் வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்புகள், வரையறுக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தலாம்.

மத்திய அரசின் கீழ் வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலக துறை, “Accounts officer” என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்பு காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம். முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 1௦ ரூபாய்.

 நாம் விண்ணப்பித்து பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறுந்தகடுகள் வழியில் தகவலை பெற கட்டணம் 5௦ ரூபாய். வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

நீங்கள் தயார் செய்த விண்ணப்ப மனுவை நகல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் தபாலை அனுப்பும்போது, பதிவு தபாலில் ஒப்புகை சீட்டு RPAD அனுப்ப வேண்டும்.

◼ தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?

தகவல் அளிப்பதில் இருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை, தகவல் பெரும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவை இல்லை.

 நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், லஞ்ச ஒழிப்பு துரையின் தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை.

தகவல் அறியும் உரிமை சட்ட மாதிரி விண்ணப்பம் இதோ உங்களுக்காக....

=================================

எடுத்துக்காட்டாக குடும்ப அட்டை பெறுவதற்கான விவரத்தை கேட்பது எப்படி?
 ===========================================

அனுப்புனர் :

 தங்கள் முழு முகவரி

பெறுனர் :

பொது தகவல் அலுவலர் அவர்கள்,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவகம்,
மாவட்டம்.

வணக்கம்,

பொருள் : தகவல் பெரும் உரிமை சட்டம் 2௦௦5 ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக...

1. புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.

2. குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவ்வளவு என்று தெரிவிக்கவும்.

3. குடும்ப அட்டை பெற விண்ணப்பிகும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.

4. குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால், எத்தனை நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் ? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்றால், அதற்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.

5. குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவகத்திற்கு வந்திருப்பதை வின்னபதாரருக்கு எவ்வாறு தெரிவிக்கப்படும் (எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.

6. குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.

7. ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்து விட்டால், (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்ப அட்டை பெற எந்த அலுவகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் ? அப்படி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.

8. ஒரு ஆண் அல்லது பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் ?

9. ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால், எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும் ? அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.

10. எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.

11. நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றல் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.

12. எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமாரத்தின் அடிப்படையில் உள்ளனவா அல்லது மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.

மேலும் உங்கள் பகுதியிலுள்ள ரேஷன் கடையின் கார்டுதாரர்கள் எத்தனை பேர்?

 பருப்பு, சர்க்கரை எத்தனை மூட்டைகள் வந்துள்ளன என்பதையும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து தகவலை அறிந்து கொள்ளலாம்.

இது போன்ற நீங்கள் எந்த துறையில் இருந்து தகவல்களை பெற விரும்புகிறீர்களோ, அங்கு நீங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கலாம்.

உங்களுடைய விண்ணப்பத்திற்கு 3௦ நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். தகவல் கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள மேல்முறையீட்டு அலுவலரிடம், நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்த நகல், மனுவை பெற்று கொண்டதற்கான ஒப்புகை சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேல்முறையீட்டு அலுவலரிடம் பதில் கிடைக்காத பட்சத்தில் மாநில தகவல் ஆணையத்திடம், எனக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கவில்லை என புகார் செய்யலாம்.

 உங்களுடைய ஆவணங்களை ஆய்வு செய்து, அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தகவல் அளிக்காத அலுவலருக்கு தண்டனை விதிக்கலாம். 

No comments:

Post a Comment