தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலை பத்திரமாக உள்ளது: ஐகோர்ட்டில் அரசுத் தரப்பு தகவல்...

பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலை பத்திரமாக உள்ளது: ஐகோர்ட்டில் அரசுத் தரப்பு தகவல்...

சென்னை: பழநி முருகன் கோயில் நவபாஷாண சிலை பாதுகாப்பாக உள்ளதாக ஐகோர்ட்டில் இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. பழநியை சேர்ந்த ஸ்ரீசிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில் பழநி முருகன் கோயில்  நவபாஷான சிலை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய என் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும். நவபாஷாண  சிலையை மாற்றக்கூடாது என்று உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு  நீதிபதி ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது பல்வேறு கோயில் நிலங்களை ஆக்கிரமித்தது தொடர்பான வழக்கு  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. மேலும் பழநி மூலவர் சிலையான நவபாஷாண சிலை பத்திரமாக, பாதுகாப்பாக  உள்ளதாகவும், அந்த சிலையை மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை முடித்து  வைத்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment