NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 2 July 2018

வைர வியாபாரி நிரவ் மோடிக்கு 'ரெட் கார்னர்' நோட்டீஸ்

வைர வியாபாரி நிரவ் மோடிக்கு 'ரெட் கார்னர்' நோட்டீஸ்

🏦பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில 🏦வங்கியிடம் இருந்தும் 💸ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிய நிரவ் மோடிக்கு எதிராக😡 வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக 👮சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் 💸வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. ✈வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ள அவரை :flag-in:இந்தியாவிற்கு வரவழைக்க தகுந்த நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து 📜சம்மன்கள் அனுப்பி வருகின்றன. நிரவ் மோடியின் 🛂பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது. பாஸ்போர்ட் ரத்து🚫 செய்யப்பட்ட தகவலை இண்டர்போலிடம் 👮சிபிஐ தெரிவித்தது. அத்துடன், 🤵நிரவ் மோடி அவரது சகோதரர் 👨நிஷால் மோடி மற்றும் அவர்களின் நிறுவன தலைமை நிர்வாகி 👨சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக🚫 ரெட் கார்னர் 📜நோட்டீஸ் பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டது🙏. இதனை ஏற்ற அவர்கள் 🤵நிரவ் மோடிக்கு 📜நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்கள்👍. அதில், குற்றம்சாட்டப்பட்ட 👥3 பேரின் இருப்பிடம் தெரிந்தால் அவர்களை கைது⛓ செய்யும்படி 192 உறுப்பு நாடுகளிடமும் இண்டர்போல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைது⛓ செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது😳.

 

No comments:

Post a Comment