NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

தொட்டியம், முசிறி பகுதியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்

தொட்டியம், முசிறி பகுதியில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்

தொட்டியம்: தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை பகுதியில் உருமாரி வாய்க்கால் பகுதியில் தூர்வாரும் பணி நடைபெற்றது. இப்பணிகளை கலெக்டர் ராஜாமணி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொட்டியம் வட்டத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் வாய்க்கால்களில் உபரிநீர், மழைவெள்ள நீர் கொண்ட உருமாரி வாய்க்கால் வழியாக திருஈங்கோய்மலை பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும். இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருக்கும் நிலையில் வெள்ளநீர் உட்புகுந்து வாய்க்காலின் கடை பகுதியில் உள்ள அலகரை, அரியணாம்பேட்டை, மணமேடு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கும். இதனை தடுக்க கொண்ட உருமாரி வாய்க்கால் அமைந்துள்ள ஷட்டர் அருகே சுமார் 1,100 மீட்டர் பகுதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டது. 

தூர்வாரும் பணியினை காவிரி ஆறு, வடகரை வாய்க்கால், நேரடி மதகு 1 முதல் 7வரை பாசனதாரர்கள் சங்கத்தின் முன்னிலையில் குடிமராமத்துப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதேபோல் முசிறி கிழக்குப்பகுதியில் அய்யாறு வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் சுமார் 1700 மீட்டர் ரூ.20 லட்சம் மதிப்பில் நடைபெற்றது. அய்யாறு வடிகால் வாய்க்காலில் கொல்லிமலை மற்றும் பச்சமலையிலிருந்து வரும் தண்ணீர், காட்டாற்று வெள்ளம் வரும் என்பதால் காவிரி ஆற்றில் கலக்கும் பகுதிகளில் இருக்கும் தங்கு தடைகளை அகற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் கணேசன், முசிறி கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் செங்கல்வராயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தூர்வாரப்படாத வாய்க்கால்கள் விரைவில் தூர்வாரப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment