கேம்பஸ் இன்டர்வியூவில் சோபிக்காத இஞ்ஜினியரிங் பட்டதாரிகள்
பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள், வேலைவாய்ப்பை பெறும்பொருட்டு நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வியூக்களில், பாதிக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெற்றி பெற தவறிவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
42 சதவீதம் (இதுவே அதிகம்) :
இதுதொடர்பாக, ஆல் இந்தியா கவுன்சில் ஆப் டெக்னிகல் எஜூகேசன் ஆய்வை நிகழ்த்தியுள்ளது. அதன்முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2017-18 ம் ஆண்டில், பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டர்வியூக்களில் 42 சதவீதத்தினர் மட்டுமே பணிவாய்ப்பை பெற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகள் நிலவரப்படி, இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
2013-14 ம் ஆண்டில் 31.95 சதவீத பொறியியல் பட்டதாரிகளும், 2016-17 ம் ஆண்டில், 38.39 சதவீதத்தினரே, கேம்பஸ் இன்டர்வியூக்களில் பணிவாய்ப்பை பெற்றிருந்தனர்.
2014-15 ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் ஏஐசீடிஇ கட்டுப்பாட்டில் 3400 பொறியியல் கல்லூரிகள் இருந்தநிலையில், தற்போதைய நிலவரப்படி 3225 கல்லூரிகள் மட்டுமே உள்ளன.

COMMENTS