NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 27 July 2018

ஜீவகாருண்யம்

                                                                                     ஜீவகாருண்யம்😭🙏பலமுறை பார்த்துவிட்டேன்.இன்றுதான்,பெரியவரிடம் நின்று விசாரித்து அறிந்தேன்.மாட்டுக்கு புல் ,தழைகளை தானே ஊட்டி விடுகிறார்.
"தினமும் ஒரு மணிநேரம் இப்படி போகிறது, கடந்த ஆறு வருஷமா இந்த மாட்டை நான் மாற்றல... நேற்று கூட 50மூட்டைகளை அசால்டாக சுமந்துச்சு, எந்த மூட்டை எந்த கடைக்கு போகணும் னு அதுக்கு நல்லாவே தெரியும்.
பலர்,மாடு சாப்பிட கடமைக்கே என்று வைக்கோல அப்டியே போட்டுட்டு போய்டுவாங்க,அதுவும் சாப்டும்தான்.ஆனா,நான் அதுக்கு தேவைப்படறத வாயில் வைத்து ஊட்டி விட்டு போனால்தான் எனக்கு சந்தோஷம் எம் மாட்டுக்கும் சந்தோஷம்."என்றார்,
வேலூர் பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் பெரியவர் கோவிந்தசாமி.
அதெப்படி தினமும் பொறுமையா கொடுக்கறீங்க எனக் கேட்டதற்கு டக்கென பதில் வந்தது அவரிடமிருந்து"அது என்னை காப்பாத்துது,நான் அதை காப்பாத்தறேன்".

மனதால் salute அடித்து, ரொம்ப சந்தோஷம் எனக் கூறி விடைபெற்றபோது, ஜீவகாருண்யம்
என்ற வார்த்தைv நினைவுக்கு வந்தது வள்ளலார் உருவத்தோடு.
நட்புடன்
ச.கணேசன். 
மதுரை

No comments:

Post a Comment