இன்று 103 நிமிடங்கள்
நீடிக்கும் முழு சந்திர கிரகணம்
21ம் நூற்றாண்டிலேயே மிக நீளமான முழு
சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது.
இது 103 நிமிடங்கள் நீடிக்கும். இதைப் பார்வையிட சென்னை
பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு
உள்ளது. இன்று ஏற்படவுள்ள முழு
சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு
தொடங்குகிறது. 103 நிமிடங்கள்
தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிகிறது. அப்போது
நிலா, ரத்த சிவப்பு நிறத்தில்
காட்சி தரும். மேலும், புதன்,
வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய
5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து
வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர
கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது. அடுத்து
இதே போன்றதொரு நீளமான முழு சந்திர
கிரகணம் 2029ம் ஆண்டு, ஜூன்
மாதம் 25ந் தேதி நிகழும்,
அதுவும் 103 நிமிடங்கள்
நீடிக்கும் என்பது கூடுதல் தகவல்.
இந்த 21-ம் நூற்றாண்டின் மிக
நீளமான முழு சந்திர கிரகணம்
இதுதான் என்பதனையடுத்து, இந்த சந்திரகிரகணத்தை வெறும்
கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS