தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 15 July 2018

வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பதின்மப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி ஜூலை-14     
பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி செயின்ட் ஜோசப் பதின்மப் பள்ளியில் வேந்தன்பட்டியில் கருப்பு காந்தி, கடமைகளின் உந்தி, கடிகாரம் கட்டாத கால ஓட்டக்காரர், கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
              இருவிழி இருந்தும் கல்வி என்னும் விழி இல்லாவிட்டால் பயனில்லை. கல்வி என்னும் மூன்றாம் விழி தந்து உலகே நம்மைக் காணச் செய்த மகத்தான மாமனிதர் காமராஜர் அவர்களின் சாதனைகளை மாணவர்கள் பேசியும் ஓரங்க நாடகமாக நடித்தும் காட்டினர்.
             எளிமையின் தோற்றம், எண்ணத்தில் ஏற்றம், அரசியலில் நேர்மை என வாழ்ந்த காமராஜரைப் போல வருங்காலத்தில் மாணவர்களும் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும் என பள்ளியின் தாளாளர் & முதல்வர் திருமதி அமலா ஜோசப் அவர்கள் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார்.
              இந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் போதகர் சாம் கிருபாகரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் திரு.சிவமுருகன் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். முடிவில் துணை முதல்வர் திரு.ராஜ்குமார் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment