#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 11 July 2018

TODAY RASI PALAN 11.07.2018

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய  🕉🤘
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
                      ராசிபலன்
                   11-07-2018
                          புதன்
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
மேஷம்
அசாதாரணமான சிலதை நீங்கள் செய்ய உங்கள் ஆரோக்கியம் இடம் தரும் என்பதால் விசேஷமான நாள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போக்கு மாறியிருப்பதால் அவர்கள் எல்லையில்லா ஆனந்தம் கொள்வார்கள். இன்று காதலில் விழுவது கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். உங்கள் துணை கொடுக்கும் இன்ப அதிர்ச்சியில் இன்று நீங்கள் குஷியாகிவிடுவீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 1
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
ரிஷபம்
ஓய்வு முக்கியமானதாக இருக்கும் நாள் - சமீப காலமாக மன அழுத்தத்திற்கு ஆளானதால் இத அவசியம் - பொழுதுபோக்கும் மனமகிழ் நிகழ்வுகளும் நீங்கள் ரிலாக்ஸ் பண்ண உதவும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் - ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். நாளின் பிற்பகுதியை உற்சாகமானதாகவும் பொழுதுபோக்கானதாகவும் ஆக்கிட ஏதாவது பிக்ஸ் பண்ணுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். பகல் கனவு உங்களுக்கு பின்னடைவைத் தரும் - மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். 'உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார்.
அதிர்ஷ்ட எண்: 1
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
மிதுனம்
சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் - எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். உங்கள் நட்சத்திரங்கள் இன்று அதிகமான சக்தியைக் கொடுக்கும் - எனவே முக்கியமான மற்றும் நீண்டகால அடிப்படையில் ஆதாயம் தரும் முடிவுகளை எடுத்திடுங்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் - அது தள்ளிப்போகும். இன்று, உங்கள் துணை காதலும் களிப்பும் நிறைந்த வேறு ஒரு இனிய உலகுக்கு உங்களை அழைத்து செல்வார்.
அதிர்ஷ்ட எண்: 8
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
கடகம்
உங்களின் பொறுப்பற்ற கருத்துகளால் குடும்பத்தினரின் உணர்வுகலை நீங்கள் புண்படுத்தலாம். முடியுமானால் கருத்துகளை சொல்வதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள். உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிராக அமைந்து, குடும்பத்தின் பெயருக்கு களங்கமாகிவிடக் கூடும். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் - ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். அலுவலக வேலையில் அதிக ஈடுபாடு காட்டுவதால், உங்கள் துணைவருடனான உறவு பாதிக்கப்படலாம். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கஷ்டப்படுவீர்கள். போட்டி வரும்போது வேலைக்கான அட்டவணை கடுமையாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணைக்கு உங்கள் அக்கரை தேவை இதனால் வீட்டில் சில ப்ரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 2
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
சிம்மம்
உடல்நலம் நன்றாக இருக்கும். மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள். உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் - ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் - நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் - நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வில் ஒரு அழகான திருப்பத்தை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 1
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
கன்னி
நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அணுகுமுறையில் தாராளமாக இருங்கள். ஆனால் நீங்கள் நேசிப்பவர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்திவிடாமல் இருக்க நாக்கை கட்டிப் போடுங்கள். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும். தொழில் ரீதியாக குறிக்கோள்களை அடைவதற்கான வவியில் சக்தியை செலவட சரியான நேரம் இது. உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் உறவினரால் திருமண வாழ்வில் சிக்கல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 8
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
துலாம்
சக்தி அதிகமாக இருக்கும். இன்று அசாதாரணமாக எதையாவது செய்வீர்கள். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது ஆனந்தமாக இருக்கும். உடன் யாரும் இல்லாவிட்டால் - உங்கள் புன்னகைக்கு அர்த்தம் கிையாது - சிரிப்புக்கு சப்தம் இல்லை உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண லாபம் பற்றி சிந்திக்காதீர்கள். ஏனெனில் தொலைநோக்கில் அது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம்.
அதிர்ஷ்ட எண்: 1
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
விருச்சிகம்
ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். நிலுவையில் உள்ள குடும்ப கடன்கள் அனைத்தையும் உங்களால் தீர்க்க முடியும். ரொமான்ஸ் உற்சாகமாக இருக்கும் - எனவே நீங்கள் காதலிப்பவரை தொடர்பு கொள்ளுங்கள், இந்த நாளை சிறப்பானதாக ஆக்குங்கள். அதிக வேலை அழுத்தம் இன்று ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்படவும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையின் அன்புக்காக ஏங்குகிறீர்கள் என்றால் அது இன்று அபரிமிதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 3
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
தனுசு
அதிகம் சாப்பிடுவது, அதிக கலோரி உணவை தவிர்க்க வேண்டும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். இன்று நீங்கள் செழுமையான காதல் சாக்லேட்டை உண்டு களிப்படையலாம். புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். இந்த நாளை சிறப்பானதாக்க, மறைந்திருக்கும் தகுதிகளை பயன்படுத்துவீர்கள். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.
அதிர்ஷ்ட எண்: 9
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
  🤘🕉  ஹரி ஓம் நம சிவாய 🕉🤘
மகரம்
நலிவுற்ற உடல் மனவை பலவீனமாக்கும் என்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்ப ரகசிய செய்தி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். கடவுளை வணங்குவது போல தெய்வீகமானது காதல். ஆன்மிகம் மற்றும் பக்தியை போல தூய்மையானது காதல் என்பதை நீங்கள் உணரும் நாள் இது. இன்று உங்களை வெறுப்பவர் ஒருவருக்கு நீங்கள் ஒரு ஹலோ சொல்வதன் மூலம் ஆபீசில் ஒரு அருமையான மாறுதல் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. வெளியாட்களின் ஆலோசனைப்படி நடக்காதீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 9

கும்பம்
அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் - அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். விஷயங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திட சகோதரருக்கு உதவுங்கள். மோதல்களுக்கு தேவையில்லாமல் இடம் தராதீர்கள். மாறாக சுமுகமாக அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடனேயே செலவிடுவீர்கள். அது மிக இனிமையான பொழுதாக இருக்கம்
அதிர்ஷ்ட எண்: 7

மீனம்

வீட்டில் வேலை செய்யும்போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் ஏதாவது பொருள்களை கவனக் குறைவாக கையாண்டால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். அமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிட்டால் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.
அதிர்ஷ்ட எண்: 5

No comments:

Post a Comment