#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 16 July 2018

TODAY RASI PALAN 16.07.2018

தினபலன் 16.07.2018

♈ *மேஷம்* ♈

_”மேட முயற்சி” என்பதற்கேற்ப எந்த காரியத்திலும் முதலில் சில தடைகளை சந்தித்து பின் விடாமுயற்சியால் வெற்றிகளைக் குவிக்கும் மேஷ ராசி அன்பர்களே, இன்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். தண்ணீர் தொடர்புடைய பாதிப்புக்களால் மருத்துவச்செலவுகள் உண்டாகும். கவனமாக இருந்தால் எல்லாம் சுபம்._

♉ *ரிஷபம்* ♉

_எந்த விஷயத்திலும் சூழ்நிலையிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். இன்று குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையே நிலவும். நீங்களே நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்னைகளை உண்டாக்கும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உடல்நிலையும், மனநிலையும் பாதிப்படையும். எதை செய்வதற்கு முன்பும் நிறுத்தி, நிதானமாக செய்யுங்கள். இந்த வாரம் இனிய வாரமாக இருக்கும்._

*♊ மிதுனம் ♊*

_எந்த விஷயத்திலும் சூழ்நிலையிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். இன்று குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலையே நிலவும். நீங்களே நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண் பிரச்னைகளை உண்டாக்கும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உடல்நிலையும், மனநிலையும் பாதிப்படையும். எதை செய்வதற்கு முன்பும் நிறுத்தி, நிதானமாக செய்யுங்கள். இந்த வாரம் இனிய வாரமாக இருக்கும்._

*♋ கடகம் ♋*

_கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டு பிறர் மனம் கவர்ந்திடும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் மனசஞ்சலம் நீங்கி அனுகூலம் தரும் வகையில் அனைத்து விசயங்களும் இனிதே நடைபெறும். இன்று மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே மேன்மையை அடையமுடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை வீண்பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் எதிலும் கவனம் தேவை._

*♌ சிம்மம் ♌*

_தன்னலத்தில் கொஞ்சமும், பிறர்நலத்தில் அதிக கவனமும் செலுத்தி புண்ணியங்கள் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் முக்கிய முடிவுகளை ஒத்திப் போடுவது நல்ல நிலையை உங்களுக்கு அளிக்கும். இன்று கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் காப்பாற்றிக்கொள்வது மிகவும் நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் வீண்விரயங்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சற்று முழுமுயற்சியுடன் செயல்பட்டால் நற்பெயர் அடையமுடியும்._

*♍ கன்னி ♍*

_கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இடைவிடாத உழைப்பினால் பொருளை தக்க வைத்திடும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் ஞானம் நிறைந்த புதிய சிந்தனைகளும், எந்த செயலையும் மின்னல் வேகத்தில் புரிந்து கொள்ளும் புதிய மனோபாவமும் உண்டாகும். இன்று நீங்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். ஒரு காரியத்தை இருமுறை யோசித்துச் செய்தால் சிரமத்திலிருந்து மீளலாம். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி புதிய தொழில் தொடங்குவதோடு, புதிய ஒப்பந்தத்தையும் பெறுவார்கள்._

*♎ துலாம் ♎*

_நன்மை தீமைகளை ஆய்ந்தறிந்து நியாய வழியில் அடுத்தவருக்கும் உதவி புரிந்திடும் துலாம் ராசி அன்பர்களே, இந்த வாரம் கடந்த காலத்தில் கிடைத்திராத சுகமான அனுபவங்கள் கிரக அனுகூலத்தால் உங்கள் வாழ்வில் நிகழும். இன்று வியாபாரிகளின் லாபத்துக்குக் குறைவு வராது. சிலர் வீடு மாற்றம் செய்வார்கள். கணவன்- மனைவி ஒற்றுமைக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் இருக்கும். அரசு ஊழியர்கள் கேட்ட மாறுதலை அடையலாம்._

*♏ விருச்சிகம் ♏*

_பிறர் போற்றலையும், தூற்றலையும் பொருட்படுத்தாது தனக்கென்று தனிப் பாதை வகுத்து செயல்படும் விருச்சிகராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுடைய பொது நலப்பணிகள் மேலோங்கி உங்களுக்கு உயரிய அந்தஸ்து கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். உடல்நிலையில் பின்னடைவு வர வாய்ப்புகள் உள்ளன. உணவுப்பழக்கத்தில் எச்சரிக்கையாக இருந்தால் பின்னடைவைத் தவிர்க்கலாம். பிள்ளைகளின் படிப்பில் இருந்த மந்தநிலை மாறும்._

*♐ தனுசு ♐*

_கற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, நிஜ வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து வாழும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு வேண்டிய நற்பலனகளை யாராலும் தடுக்க முடியாது. இன்று நீண்ட நாட்களாக வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி நிறுவனத்தாரின் பாராட்டைப் பெறுவார்கள் இளைஞர்கள் வேலை தேடும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வயதான பெற்றோர் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை._

*♑ மகரம் ♑*

_பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. இன்று திடீர் பண வரவுகளால் குடும்பத் தேவைகளை சமாளிப்பீர்கள். பெண்கள் தங்கள் சகோதரர்களிடம் கேட்ட உதவி கிடைக்காமல் மனவருத்தம் வர வாய்ப்புள்ளது. இதுவரை வாட்டி வதைத்து வந்த பிணி, பீடைகள் உங்களை விட்டு விலகும். நீண்டநாள் பிரிந்து வாழ்ந்த தம்பதியர் ஒன்றுகூடுவார்கள்._

*♒ கும்பம் ♒*

_தகுதிக்கேற்ப வாழ்ககை நடத்தி கிடைத்ததை பெரிதென எண்ணி வாழ்ந்திடும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்கள் மனதிலும், செயலிலும் உற்சாகம் நிறைந்திருக்கும். மனதில் தைரியமும், உற்சாகமும் உண்டாகும். இன்று குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியம் தடையின்றி நடக்கும். இந்த மாதம் முழுவதும் உறவினர் வருகை, சுபகாரியப் பேச்சுகள் என்று வீட்டில் கலகலப்பு நிலவும். தொழிலதிபர்கள் தொழிலாளிகளின் ஒற்றுமையால் இரண்டு பங்கு லாபத்தைப் பெறுவார்கள்._

*♓ மீனம் ♓*

_தனது செயல்களை பிறர் அறியாத வண்ணம் சூட்சுமமாய் செயல்படுத்தும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் அனுகூலமான பேச்சுகளால் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். இன்று வியாபாரிகளின் கடன் பாக்கிகள் வசூலாகி, வியாபாரமும் லாபத்தோடு நடக்கும். எதிர்ப்புகள் விலகும். உடன்பிறந்த சகோதரர்கள், உங்கள் பேச்சைமீறி நடக்கலாம். சொத்துப்பிரச்னை வரும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள்._

No comments:

Post a Comment