NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 13 August 2018

ரயில் நிலையங்களில்16ம் தேதி வரை மூன்றடுக்கு பாதுகாப்பு..

ரயில் நிலையங்களில்16ம் தேதி வரை மூன்றடுக்கு பாதுகாப்பு...

சென்னை:'சுதந்திர தினத்தையொட்டி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும்' என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

சுதந்திர தினவிழா, நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயங்கரவாதிகளால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாதபடி, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், இன்று மாலை, 4:00 மணியில் இருந்து, 16ம் தேதி காலை, 8:00 மணிவரை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்களில், மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்ட்ரலில், ரயில்வே போலீசார், 100 பேர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், 150 பேரும்; எழும்பூரில், ரயில்வே போலீசார், 50 பேர், ரயில்வே பாதுகாப்பு படையினர், 80 பேரும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பயணியர் மற்றும் உடமைகள், 'மெட்டல் டிடெக்டர்' மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்படும். நிலையத்திற்கு வரும் வாகனங்கள், வளாக நுழைவு வாயிலில், சோதனை செய்யப்பட்ட பின், உள்ளே அனுமதிக்கப்படும்.

நிலையங்களிலும், ரயில்களிலும், சந்தேகப்படும்படியாக யாரும் தென்பட்டாலோ, பொருட்கள் கிடந்தாலோ, உடனடியாக ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும், பயணியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment