தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 9 August 2018

5 லட்சம் முறைக்கு மேல் ‘கருணாநிதி’ இணையதளத்தில் தேசிய அளவில்....

5 லட்சம் முறைக்கு மேல் ‘கருணாநிதி’ இணையதளத்தில் தேசிய அளவில்....?

கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் சேர்க்கப்பட்டது முதல் இணையதளத்தில் தேசிய அளவில் அதிகளவில் அவரது பெயர் தேடப்பட்டுள்ளது.

அதாவது 5 லட்சம் முறைக்கு மேல் ‘கருணாநிதி’ என்ற வார்த்தையையும், 2 லட்சம் முறைக்கு மேல் ‘கலைஞர்’ என்ற வார்த்தையையும் பதிவிட்டு, செய்திகளை மக்கள் பெற்றுள்ளனர்.

இதுதவிர மாநிலங்கள் வரிசையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகியவற்றில்கருணாநிதி குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் அதிக முறை தேடப்பட்டுள்ளன.

கூகுள் தேடல் பொறி மூலம், கடந்த 7 நாளில் 24 மாநிலங்கள் அதிகம் கருணாநிதி குறித்த தகவல்களை தேடியுள்ளனர்.

தேசிய அளவில் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலும் கருணாநிதி, கலைஞர் என்ற பெயர் அதிகளவில் தேடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment