Wednesday, 15 August 2018

பொன்னமராவதி அருகே செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேந்தன்பட்டியில் 72 ஆவது சுதந்திர தின விழா இனிதே நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, வேந்தன்பட்டியில் 72 ஆவது சுதந்திர தின விழா இனிதே நடைபெற்றது.

விழாவில் மருத்துவர் அருண் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  மாணவர்கள் தங்களது கடமைகளை சரிவர செய்தாலே வாழ்க்கையில் எளிதாக சாதிக்க முடியும் என்று தனது சுதந்திர தின சிறப்புரையில் கூறினார். பள்ளியின் தாளாளர் & முதல்வர் திருமதி அமலா ஜோசப் அவர்கள் தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவர் தனது தலைமையுரையில் விதைக்குள் ஆலமரம் போல ஒவ்வொருவருக்குள்ளும் ஆற்றல் உள்ளது. அதை ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பின் மூலம் வெளிக் கொணரும் போது ஞானத்திலும் அறிவிலும் பிரகாசிக்க முடியும் என்று கூறினார். விழாவில் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாணவர்கள்  சுதந்திரம் குறித்தும், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும் பேசினர். மாணவர்கள் தேசத் தலைவர்களைப் போல வேடமணிந்து அணிவகுத்து வந்தது மிகவும் அருமையாக இருந்தது. முன்னதாக  ஆசிரியர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். விழாவில் போதகர் சாம் கிருபாகரன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். திரு. மங்கைபாகன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். ஆசிரியை பாலா நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a comment