#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 15 August 2018

பொன்னமராவதி அமல அன்னை பதின்மப்பள்ளியில் 72வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி அமல அன்னை பதின்மப்பள்ளியில் 72வது சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின்            முதல்வர்   அருட்சகோதரி                       ச.ம.மரியபுஷ்பம் அவர்கள்  தலைமையில்  72 வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 தமிழாசிரியர் திருமதி.சத்யா அவர்களின் வரவேற்புரையோடு விழா தொடங்கியது. கொப்பனாபட்டி ஊராட்சி மன்ற மேனாள்  தலைவர் பெ.மாரிமுத்து  அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் தோழர் பக்ருதீன், தோழர்கள் தீன், பிச்சை, சிங்காரம்,நாவலர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.செம்பூதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், முருகப்பா ஜூவல்லரியின் உரிமையாளருமான PRC.சிங்காரம் அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.விழாவில் திரு.சரவணன், திரு.வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.தோழர் பக்ருதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக... தலைவர்களாக உருவெடுக்க வேண்டும் என்று தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி  அவர்கள் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாடலோடு தொடங்கி தலைமை உரையை மாணவர்களுக்கு வழங்கினார்.விழா ஏற்பாடுகளை ஆசிரியச் செயலர்கள் திரு.முத்துவேல்,     திருமதி.செல்வராணி,                செல்வி.ஜானகி, செல்வி.வசந்தி,திருமதி. சித்ரா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். திரு.முத்துவேல் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிதாக நிறைவுபெற்றது. நிகழ்ச்சிகளை ஆசிரியர் பிரின்ஸ்  (எ) இளவரசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.                                   

No comments:

Post a Comment