தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 2 August 2018

மௌண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

மௌண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா


மௌண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. பள்ளியின் இயக்குநர் டாக்டர்.ஜோனத்தன் ஜெயபரதன், இணை இயக்குநர் திருமதி.ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர்.சலஜாகுமாரி ஆகியோர் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட மோட்டார் வாகன வட்டார போக்குவரத்து அலுவலர் (சுவுழு) திரு.பாலசுப்ரமணியன், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.செந்தாமரை மற்றும் ரோட்டரி சங்கத்தின் திறவுகோல் திரு.மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தர சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா இனிதே நடைபெற்றது.
பள்ளியின் இயக்குநர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கினார். விபத்து இல்லா தமிழகம் உருவாக்குவது நமது கடமையென கருதி, தலைகவசம், பாதுகாப்பு இருக்கை பெல்ட் ஆகியவை அணிந்து வாகனங்கள் ஒட்டுதல் வேண்டும். அதிவேகத்தை தவிர்த்து ஒளிகுறியீட்டைக் கவனித்து வாகனம் ஒட்டி உயிரைப் பாதுகாக்க வேண்டும் என மோட்டார்; வாகன ஆணையர் திரு.செந்தாமரை அவர்கள் உரையாற்றினார்கள். கின்னஸில் இடம் பெற்ற ‘உயிரும் உறவும்” என்ற கட்டுரை பற்றியும் சாலை விதிகளை மதிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தின் அடிப்படையிலும் திரு.மோகன்ராஜ் அவர்கள் உரையாற்றினார்.
தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் அந்தக்காலத்தில் விலங்குகளில் பயணித்தோம். அதைத் தொடர்ந்து காற்று வழி பயணம், நீர்வழி பயணம், தொடர்வண்டி பயணம், சாலைவழிப் பயணம் என மாற்றம் கண்டுள்ளோம். இத்தகைய பயணங்களிலெல்லாம் அதிகமான உயிரிழப்பு விழுக்காடு ஏற்படுவது சாலைவழி பயணத்தில் மட்டுமே. இதற்கு காரணம் நேரத்தை திட்டமிடாமல் இறுதி நேரத்தில் திட்டமிடாமல் இறுதி நேரத்தில் கிளம்பி அதிவேகத்தில் செல்லுதல், வளைவு, பாலம் போன்ற இடங்களில் தொடர்ந்து வரும் வாகனங்களை முந்துதல் அலைபேசி பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஒட்டுதல், சரியான தூக்கமின்மையிலும் வாகனம் ஓட்டுதல், சாலையில் செல்வோருக்கு உதவவும், பாதுகாப்பையும் கருதி சாலையில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை கண்டுக் கொள்ளாமல் வாகனம் ஓட்டுதல், பாதசாரிகளும் விதிகளுக்கு உட்படாமல் பயணித்தல் ஆகியவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன போக்குவரத்து விதிகளை சரியாக அனைவரும் பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று கூறினார். நில், கவனி, ஒருவழிப்பாதை, தடை, இடது பக்க தடை, வலது பக்க தடை, நோ பார்க்கிங், வேக வரம்பு, ஒலி எழுப்பாதீர் போன்ற குறியீடுகளை வரைபடத்துடன் காட்டி விளக்கமளித்ததோடு மாணவர்களால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும் தகுந்த விளக்கமளித்து சிறப்புரையாற்றினார். போக்குவரத்து விதிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இறுதியில் பள்ளியின் முதல்வர் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடம் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.             

No comments:

Post a Comment