கர்நாடக முதல்வர் குமாரசாமி அஞ்சலி-புதுச்சேரியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை
கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜாஜி அரங்கிற்கு வருகை தந்தார். அதே நேரத்தில் நடிகர் சரத்குமாரும் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது இரங்கலை தெரிவித்ததோடு கருணாநிதியின் உருவ வெண்கல சிலை புதுச்சேரி மாவட்டத்தில் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், காரைக்கால் நெடுஞ்சாலையினிற்கு கருணாநிதி பெயர் சூட்டப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
COMMENTS