NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 9 August 2018

உலக தாய்ப்பால் ஊட்டும் வார நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா

உலக தாய்ப்பால் ஊட்டும் வார நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் ஊட்டும் வார விழா மற்றும் பரிசளிப்பு விழா சங்கத் தலைவர் ளு.அழகப்பன் தலைமையில் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக வருகைபுரிந்த அனைவரையும் குழந்தைகள் நல மருத்துவர் முஆ.செந்தில்குமார் வரவேற்றார். நிலைய மருத்துவர்கள் யு.இந்திராணி, ழு.ரவிநாதன் மகப்பேறு துறைத்தலைவர் ளு.கற்பகம் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட இணைச் செயலாளர் (மக்கள் தொடர்பு) மாருதி.க.மோகன்ராஜ் பேசும் போது உலக தாய்ப்பால் வாரவிழாவை அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் பெருமைக்குரிய விஷயமாகும். குழந்தைகளை பாதுகாப்பதில் தாய்ப்பாலின் பங்கு மிகவும் முக்கியமானது. சிசு மரணம் மற்றும் சிறு குழந்தைகளின் மரணத்தை பங்கை நன்கறிந்து நமது மத்திய மாநில அரசுகளும், றுர்ழுஇருNஐஊநுகு போன்ற உலக நிறுவனங்களும் இணைந்து குழந்தை பிறந்தது முதலே தாய்ப்பாலையே புகட்ட அறிவுறுத்துகின்றன இருப்பினும், பல்வேறு காரணங்களால் தாய்ப்பால் குடிக்காததால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் இறந்து மடிகின்றன. அதை நிவர்த்தி செய்ய சமுதாயத்தில் விழிப்புணர்வை உண்டாக்கும் பொருட்டு வருடந்தோறும் ஆகஸ்டு முதல் வாரத்தை உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடி வருகின்றோம் மேலும் அரசு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை ஒதுக்கப்பட்டுள்ளது போல் தனியார் துறைகளில் பணிபுரியும் தாய்மார்களுக்கும் தனி அறை ஒதுக்கி கொடுத்தால் நல்லது என்றார்.அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் மு.சாரதா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொழு, கொழு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பேசும் போது “பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பது  தாய்சேய் இருவருக்குமே நல்லது. சில சொட்டுகளே சுரக்கும் சீம்பால் சிசுவிற்கு தேவையான சத்துக்களை உள்ளடக்கி உள்ளது. உயிரோட்டமுள்ள திரவமான சீம் பால் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள வெள்ளை அணுக்களையும், குடல் வளர்ச்சிக்கான மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. பிறந்த உடனே சீம்பாலை கொடுப்பது, தாய்ப்பால் மேலும், மேலும் சுரக்க உதவுகிறது. இதற்கு மாறாக சிசுவிற்கு மாட்டுப்பாலை கொடுப்பது குழந்தையின் குடல் சம்பந்தமான செரிமான சக்தியை குறைத்து விடுவதோடு, கேடு விளைவிக்கும் பிற ருசியால் ஈர்க்கப்பட்டு தாய்ப்பாலை குழந்தை ஒதுக்கிவிடுகிறது. சீம்பாலை உடனே கொடுப்பது சிசுவும் தாயும் உடம்போடு உடம்பு ஒட்டியிருக்க உதவுகிறது. சிசுவிற்கு கதகதப்பையும் அளிக்கிறது. அக்கதகதப்பு குறைமாதக்குழந்தை, எடை குறைந்த குழந்தைகளை மரணத்திலிருந்து பாதுகாக்கிறது என்றார். நிறைவாக நன்றியுரை செயலாளர் செல்வரத்தினம் கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. வுpழாவில் உடனடி முன்னாள் தலைவர் ளு.பார்த்திபன், பொருளாளர் டீ.அசோகன் மற்றும் செவிலியர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment