Saturday, 11 August 2018

இரத்ததான விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்குதல் கையெழுத்து இயக்கம்

இரத்ததான விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்குதல் கையெழுத்து இயக்கம்
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், திருமயம் சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கம், இணைந்து நடத்தும் ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் திட்டமான “வானவில் ஒளிக்கதிர்” என்ற தலைப்பில் புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், திருமயம் சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கம், இணைந்து நடத்தும் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தலைவர், ஆர்.எஸ்.காசிநாதன் தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஜெ.ராஜேந்திரன், மக்கள் தொடர்பு இணைச் செயலாளர் மாருதி.க.மோகன்ராஜ் துணை ஆளுனர் ஆர்.ஆரோக்கிய சாமி, சிவகாமி இரத்ததானக் கழகத் தலைவர் மெஸ்.மூர்த்தி, ஆத்மா இரத்ததான பாண்டியன், முன்னிலை வகித்தனர்.முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் திருமயம் சென்டினரி பெல்சிட்டி ரோட்டரி சங்கத்தலைவர் என்.குமரேசன் வரவேற்றார். அரசு மருத்துவக்கல்லுரி இருதயநோய் உதவிப் பேராசிரியர் மருத்துவர் கே.எம்.நிஜாமுதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஆர்.முத்துச்சாமி, என்.வேலுச்சாமி, வி.ராஜேந்திரன், த.ரவிச்சந்திரன் சதீஷ்குமார், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக செயலாளர் ஆர்.எம்.துரைமணி நன்றி கூறினார்.




No comments:

Post a comment